இங்கே சொடுக்கு

Showing posts with label சென்றுவா 2010 .... Show all posts
Showing posts with label சென்றுவா 2010 .... Show all posts

Jan 3, 2011

சென்றுவா 2010 ...!




வரும்போதெல்லாம்
நன்றாகத்தானே வந்தாய்...!

எங்கள் செலவுகளுக்காக 
நான்கைந்து
இடைத்தேர்தல் வரச்செய்தாய்
சந்தோசம்தான்..!


பக்கத்துக்குவீட்டு
மல்லிகா வயதுக்குவந்தாள்
சந்தோசம்தான்...!

நான் எப்போது சொன்னாலும்  
ரீச்சர்ச் செய்துவிடும்
ரீட்டாவை எனக்கு
அறிமுகம் செய்தாய்
சந்தோசம்தான்..!

மாந்தோப்பில்
நாங்கள் கைவைத்துவிடாமல்
காவலிருக்கும்
ராமசாமி தாத்தா இறந்துபோனார்
ஒருவகையில்
சந்தோசம்தான்...!


இப்படி
நன்றாகத்தானே போய்க்கொண்டிருந்தாய்
இடையில்
என்னாயிற்று உனக்கு..?!

மிளகு சாப்பிட்டு
குரல்வளம் பெருக்கி
ஈழத்திற்காகவே குரல்கொடுத்து
அரசியல் பயின்றவர்கள்..!

‘போடா வெங்காயம்
என்று சொன்னவர்கள்கூட
‘அடடா வெங்காயம்
என்று சொல்லுமளவு
விலைவாசி உயர்வு...!

எல்லாம் முடிந்தபின்னும்
ஏவும் நேரத்தில்
சோதனைசெய்த
ஏவுகணைத் தோல்வி
இப்படி சோகங்களையும்
ஏன் தூவிச்சென்றாய்..!?

(அட ! இதெல்லாம் கூடப் பரவயில்லை சோசியல் மேட்டர் அட்சஸ் பண்ணிக்கிறலாம்..)

ஆனால்..
நேற்றுவரை
என்னோடு இளித்து இளித்துப்பேசிய
வனஜா
இன்று என்னை
அண்ணன் என்று அழைத்துவிட்டாள் !
பெரும் சோகம்...!
அதைத்தான் தாங்கமுடியவில்லை...!

எது எப்படியோ
விமர்சனத்தில் சிக்கினாலும்
விபத்தில் சிக்காமல்
காப்பற்றிவிட்டாய்...!
விடைகொடுக்கிறேன் ..!எ
சென்று வா  2010- தே..!

(இலக்கண பிழையாக இருந்தாலும் சென்று  ‘வா என்று சொல்வதுதானே தமிழன் மரபு)