மறக்க முடியுமா
அந்த இனிய நினைவுகளை..!
புண்பட்ட மனதை
புகைவிட்டு ஆற்றியே
பண்பட்ட ஆலமரத்தை
பட்டுப்போக வைத்துவிட்ட -நம்
தைரியத்தை மறக்கமுடியுமா..!
இன்று என்னுடைய முறை
நாளை உன்னுடைய முறை - என்று
முறைவைத்து தம் அடித்தோமே..!
மறக்கமுடியுமா
அந்த இனியநினைவுகளை..!
சொத்தைப் பிகர்
என்றாலும்
சொத்துக்கு சண்டைபோடும்
அண்ணன் தம்பிபோல் இல்லாமல்
ஆளுக்கு பாதிஎன்று
சரியாய் பிரித்து
சைட் அடித்தோமே
மறக்க முடியுமா
அந்த இனியநினைவுகளை..!
அழகான பிகரென்றால்- நீ
எனக்கு மாப்பிள்ளை
அவள் உனக்கு தங்கை
கொஞ்சம் அசிங்கமானபிகரென்றால்
நான் உனக்கு மாப்பிள்ளை
அவள் எனக்கு தங்கை
இந்த அழகான உறவுகளை மறக்கமுடியுமா..!
மறக்க முடியுமா
அந்த இனிய நினைவுகளை..!
எத்தனை எத்தனை
ஆஸ்கார் விருதுகள் வாங்கியிருப்போம்
வந்தனா மேடத்திற்கு
பயந்து நடித்தும்
மற்றவர்களுக்கு
பயந்ததுபோல் நடித்தும்..!
மறக்க முடியுமா
அந்த இனிய நினைவுகளை..!
சொல்லிக்கொண்டே போகலாம்
சுகத்தையும் சோகத்தையும்...
காலண்டரில் தினமும்
தேதியைக் கிழிக்கும்போதெல்லாம்
சொர்க்கத்தின் வாழ்நாளில்
ஒன்று குறைவதுபோல்
ஓர் இனம்புரியாதபயம் எனக்குள்
ஆனாலும்
கிழித்த தேதிகளை
என்
இதயத்துள் பூட்டிவைத்துள்ளேன்
என்னுள் சோகம்வரும்போதெல்லாம்
திறந்துவைத்து தித்திக்கிறேன்...!
நாம்
ரசித்த இந்த
கல்லூரி நினைவுகளை
காற்றலைகளில் பறக்கவிடுகிறேன்
அவைகள்
உங்கள் இதய வானொலியில்
எப்போதுமே ஒலித்திருக்கட்டும்..!
நாங்கள் கேட்பதெல்லாம்
ஒன்றேஒன்றுதான்
எங்களுக்கு
இன்னொருஜென்மம் தேவையில்லை-இறைவா
எங்களை இப்படியே
விட்டுவிடேன்..!
கல்லூரிப் பக்கமாய் ஒருமுறை சென்று வந்தது போல் இருந்தது...!! அருமை...வீரா!!
ReplyDelete