இங்கே சொடுக்கு

Jan 3, 2011

சென்றுவா 2010 ...!




வரும்போதெல்லாம்
நன்றாகத்தானே வந்தாய்...!

எங்கள் செலவுகளுக்காக 
நான்கைந்து
இடைத்தேர்தல் வரச்செய்தாய்
சந்தோசம்தான்..!


பக்கத்துக்குவீட்டு
மல்லிகா வயதுக்குவந்தாள்
சந்தோசம்தான்...!

நான் எப்போது சொன்னாலும்  
ரீச்சர்ச் செய்துவிடும்
ரீட்டாவை எனக்கு
அறிமுகம் செய்தாய்
சந்தோசம்தான்..!

மாந்தோப்பில்
நாங்கள் கைவைத்துவிடாமல்
காவலிருக்கும்
ராமசாமி தாத்தா இறந்துபோனார்
ஒருவகையில்
சந்தோசம்தான்...!


இப்படி
நன்றாகத்தானே போய்க்கொண்டிருந்தாய்
இடையில்
என்னாயிற்று உனக்கு..?!

மிளகு சாப்பிட்டு
குரல்வளம் பெருக்கி
ஈழத்திற்காகவே குரல்கொடுத்து
அரசியல் பயின்றவர்கள்..!

‘போடா வெங்காயம்
என்று சொன்னவர்கள்கூட
‘அடடா வெங்காயம்
என்று சொல்லுமளவு
விலைவாசி உயர்வு...!

எல்லாம் முடிந்தபின்னும்
ஏவும் நேரத்தில்
சோதனைசெய்த
ஏவுகணைத் தோல்வி
இப்படி சோகங்களையும்
ஏன் தூவிச்சென்றாய்..!?

(அட ! இதெல்லாம் கூடப் பரவயில்லை சோசியல் மேட்டர் அட்சஸ் பண்ணிக்கிறலாம்..)

ஆனால்..
நேற்றுவரை
என்னோடு இளித்து இளித்துப்பேசிய
வனஜா
இன்று என்னை
அண்ணன் என்று அழைத்துவிட்டாள் !
பெரும் சோகம்...!
அதைத்தான் தாங்கமுடியவில்லை...!

எது எப்படியோ
விமர்சனத்தில் சிக்கினாலும்
விபத்தில் சிக்காமல்
காப்பற்றிவிட்டாய்...!
விடைகொடுக்கிறேன் ..!எ
சென்று வா  2010- தே..!

(இலக்கண பிழையாக இருந்தாலும் சென்று  ‘வா என்று சொல்வதுதானே தமிழன் மரபு)  


12 comments:

  1. கவிநயம்...நக்கல்...குசும்பு...சோகம்(வனஜா மேட்டர் தான்)...அரசியல்...என எல்லா திசைகளிலும் பயணித்திருக்கிறது கவிதை!! எல்லாவற்றிற்கும் மேலாக ரசிக்கும்படியான கவிதை!! அருமை!!

    ReplyDelete
  2. ரசிக்கும்படியான கவிதை! மிகவும் நன்றாக இருந்தது!
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    இந்த வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!

    ReplyDelete
  3. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வீரா.. :)

    ReplyDelete
  4. எது எப்படியோ
    விமர்சனத்தில் சிக்கினாலும்
    விபத்தில் சிக்காமல்
    காப்பற்றிவிட்டாய்...!
    விடைகொடுக்கிறேன் ..!எ
    சென்று வா 2010- தே..!
    parattugal

    ReplyDelete
  5. //ஆனால்..
    நேற்றுவரை
    என்னோடு இளித்து இளித்துப்பேசிய
    வனஜா
    இன்று என்னை
    அண்ணன் என்று அழைத்துவிட்டாள் !
    பெரும் சோகம்...!
    அதைத்தான் தாங்கமுடியவில்லை...!//

    உங்களோட அவளைப் பிடிக்க நேரம் வரும் காத்திருங்க

    ReplyDelete
  6. nalla kavithai.
    muyarchikku paaraaddukal.
    http://kaatruveli-ithazh.blogspot.com/

    ReplyDelete
  7. ‘போடா வெங்காயம்’
    என்று சொன்னவர்கள்கூட
    ‘அடடா வெங்காயம்’
    என்று சொல்லுமளவு
    விலைவாசி உயர்வு...!




    அடடா !!

    ஒரு வெங்காயமும் இல்லைன்னு
    சொல்லமுடியாது,
    எல்லாமே இருக்கு
    நல்லாவே இருக்கு.. நண்பா

    ReplyDelete
  8. //நேற்றுவரை
    என்னோடு இளித்து இளித்துப்பேசிய
    வனஜா
    இன்று என்னை
    அண்ணன் என்று அழைத்துவிட்டாள் !
    பெரும் சோகம்...!//
    தாங்கவே முடியாத சோகம்தான்!

    ReplyDelete
  9. இந்த வருடமும் நிறைய தங்கைகள் வாய்க்க வாழ்த்துக்களுடன்
    ....மச்சான்.

    ReplyDelete
  10. ரசிக்கும் படியான கவிதை.. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. எது எப்படியோ
    விமர்சனத்தில் சிக்கினாலும்
    விபத்தில் சிக்காமல்
    காப்பற்றிவிட்டாய்...!
    விடைகொடுக்கிறேன் ..!எ
    சென்று வா 2010- தே..!//

    ReplyDelete
  12. போடா வெங்காயம்’
    என்று சொன்னவர்கள்கூட
    ‘அடடா வெங்காயம்’
    என்று சொல்லுமளவு
    விலைவாசி உயர்வு...!

    அருமை நண்பரே... படிக்கையில் எதோ சொல்ல முடியாத சில உணர்வுகள் வந்து தழுவக் கண்டேன்.கலையில் ஆழ்வது ஒரு வரம்.அது எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை. அதை இந்த கவிதையில் எனக்களித்துள்ளீர்கள். நன்றி

    ReplyDelete